தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்லூரிகளில் செயல் படுத்தப்படும் செமஸ்டர் முறையைப் போல, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், மனப்பாடம் செய்து படிக்கும் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளிவைக்கவும் இந்த முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முப்பருவத் திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் அனைத்தும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப்படும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப்படும். அதன்படி தேர்வுகளின் முடிவுகள் இருக்கும்.
அரசின் இந்த முடிவுகளை தங்கள் கருத்துகள் மூலம் விவாதிப்போம் உறவுகளே...
- முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
- இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
- மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை
0 comments:
Post a Comment