banner

Friday, June 29, 2012

சிரிங்க.. சிரிங்க.. சிரிச்சிட்டே இருங்க...




**********************************************************************************

ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

**********************************************************************************


ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

**********************************************************************************

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை                அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.

**********************************************************************************

ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?

மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

**********************************************************************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க.........

**********************************************************************************

ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன் : நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?

**********************************************************************************

வாத்தியார் : அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு ??

சுட்டிப்பையன் : அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு ?
அத முதல்ல சொல்லுங்க சார்.....

**********************************************************************************

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்

மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

**********************************************************************************

Girls: நாங்க எல்லாம் எக்ஸாம் டைம்ல டி.வீ, கம்பியூட்டர், போன் இதெல்லாம் தொடமாட்டோம் .. உங்களால முடியுமா?

Boys: இது என்ன பெரிய மேட்டர் நாங்க Book ஐயே தொடமாட்டம்ல . நீங்க வேற..!!!

*********************************************************************************************
என்னுடைய  இன்னொரு தளத்திலிருந்து.....

Monday, June 25, 2012

TNPSC GROUP IV - HISTORY -1


  •  1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது.
     
  •  1856-ல் இந்திய இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாகிகள் (Enfield rifles) அறிமுகப் படுத்தப்பட்டன. அதனுடைய ரவைகளில் பசு, பன்றி கொழுப்புக் கலவை தடவப்பட்டு இருந்ததாக கருதப்பட்டது.

  •  காங்கிரசின் ஆரம்பகாலமான1885-லிருந்து 1905வரையிலான காலத்தை மிதவாதிகளின் காலம் (Moderates Period)

  • 1905-லிருந்து 1919 வரை தீவிரவாதிகள் காலம் (Exteremist Period).

  •  1919-லிருந்து 1947 வரை காந்தியின் காலம் (Gandhian Era).

  •  தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.ஈ. வாச்சா, ஆனந்த மோகன்போஸ், ராஷ்பிகாரி கோஷ் ஆகியோர் முக்கியமான மிதமான தலைவர்கள்.

  • அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம் தோன்றக் காரணமாக இருந்தவர்.

  •  1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டது.

  •  1907 சூரத் மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் மிதவாதிகளும், அரவிந்த கோஷ் தலைமையில் தீவிரவாதிகளும் தனித்தனியாக தீர்மானங்கள் இயற்றியதால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது.

  •  1924-ம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு சங்கம் (Hindustan Republican Association) சச்சின் சன்யால் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்மீது இரயில் கொள்ளை வழக்கான கக்கோரி சதி வழக்கு (Kakori Conspiracy Case) போடப்பட்டு ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன்லால் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

  • சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட லாலா லஜபதிராயை பிரிட்டீஷ் காவலர்கள் தாக்கியதால் பகத்சிங், சந்திரசேகர், ஆசாத், ராஜகுரு ஆகியோர் காவல் அதிகாரி யான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.

  •  பகத்சிங், பி.கே. தத் ஆகியோர் மத்திய சட்ட மன்றத்தில் வெடிகுண்டை வீசி கைதாயினர். பின்னர் 1931, மார்ச் 23 அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

  • ஜட்டின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

  •  1905-ம் ஆண்டு சியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில் இந்திய இல்லத்தை தொடங் கினார்.

  • இது பயங்கரவாதிகளின் புரட்சி மையமாகவும் பயன்பட்டு வந்தது.

  • அமெரிக்காவில் 1913-ம் ஆண்டு சோகன் சிங் பக்னா காதர் கட்சியைத் தோற்றுவித்தார். இதன் பொதுச் செயலாளரான லாலா ஹர்தயாள் புரட்சிவாதக் கருத்துகளைப் பரப்பி வந்தார்.

  • பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு (Policy of Divide and Rule) முதல் தர முன்னுதாரணமாக விளங்கியது வங்கப் பிரிவினை.

  •  பிரிவினை நாளான 1905, அக்டோபர் 16 அன்று தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. தாகூர் பிரிவினையை எதிர்த்து அமர்சோனார் பங்களா என்ற பாடலை இயற்றினார்.

  •  1906-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி இயக்கம், விதேசி இயக்கம், தேசியக் கல்வித்திட்டம், சாத்வீக எதிர்ப்பு (Passive resistence) குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • 1906 ஆகஸ்ட் 15-ல் தேசிய கல்விக் குழு அமைக் கப்பட்டதன் அடிப்படையில் தேசியக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு அரவிந்த் கோஷ் அதன் தலைவரானார்.

  •  வங்காளப் நவாப் சலிமுல்லாகானின் முயற்சி யால் முஸ்லீம் மக்களுக்காக 1906 டிசம்பர் 30-ல் அகில இந்திய முஸ்லீம் லிக் (All India Muslim League) அமைக்கப்பட்டது. அதன் நிரந்தரத் தலைவராக ஆகாகான் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

  •  சர் சையத் அகமதுகானால் ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம் கல்வி காங்கிரஸ் (Muslil Educational Congress) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது காங்கிரசுக்கு இணையான அமைப்பாக விளங்கியது.

  • இவரே ஐக்கிய இந்திய நாட்டுப் பற்றுடையோர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

  •  1915-ம் ஆண்டு பம்பாயில் சின்கா தலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகளை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அனுமதித்தது.

  • 1916-ம் ஆண்டு லக்னோ மாநாட்டில் மிதவாதி களும், தீவிரவாதிகளும் இணைந்தனர். இதற்கு திலகரும், அன்னிபெசன்ட் பெரும் பங்காற்றினர்.

  • இந்திய தன்னாட்சிக் கழகம் திலகரால் 1916 ஏப்ரல் மாதத்தில் புனே நகரில் தொடங்கப் பட்டது.

  •  "கேசரி', "மராத்தா' போன்ற திலகரின் பத்திரிக்கைகள் தன்னாட்சிக் கருத்துக்களைப் பரப்பின.

  • மான்டேகு பிரபு 1917 ஆகஸ்ட் 20-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுவே ஆகஸ்ட் பிரகடனம் எனப்படுகிறது. இதன்படி நிர்வாகத்தில் இந்தியர்கள் அதிகம் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியது.

  • 1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்யாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30-ம் நாள் சத்யாகிரக நாளாக அனுசரிக்க காந்தி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
    1919 ஏப்ரல் 13-ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தடை உத்தரவு ஆணையை மீறியதாகக் கூறி ஜெனரல் ரெஜினால்டு டயர் தனது படையினரை சுடுமாறு உத்தரவிட்டார். இதில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

  •  இந்திய வைசிராய் மாண்டேகுவும்,செம்ஸ்போர்டு என்பவரும் இணைந்து 1919-ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை இயற்றினர். மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் என்று பெயர். இச்சட்டத்தின்படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது.

  • கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரில் நடைபெற்ற ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியே மாப்ளா கலகம் எனப்படும்.

  •  ஒத்துழையாமை இயக்கம்- 1920-22 (Non-Co-operation Movement) நடைபெற்றது.

  • 1920 மார்ச் 10-ம் நாள் கிலாபத் இயக்கம் பின் பற்றுவதற்கான செயல்திட்டத்தை (Gandhi's Manifesto) காந்தி வெளியிட்டார்.

  • கோரக்பூர் அருகி லுள்ள சௌரிசௌரா எனுமிடத்தில் வன்முறை கட்டுக்கடங்காது போனதால் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1922 பிப்ரவரி 12-ல் கைவிடுவதாக அறிவித்தார்.

  • சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோரின் சட்டமன்ற நுழைவுத் தீர்மானம் 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் தோல்வியுற்றதால் அவர்கள் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தனர். சித்தரஞ்சன் தாஸ் கட்சியின் தலைவராகவும், மோதிலால் நேரு அதன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

  • 1929-ம் ஆண்டு இறுதியில் லாகூரில் ராவி ஆற்றின் கரையில் கூடிய காங்கிரஸ் மாநாட் டிற்கு ஜவகர்லால் நேரு தலைமை தாங்கினார். காங்கிரசில் பெரும்பான்மையோர் பூர்ண சுயராஜ்யம் என்பதை ஆதரித்ததால் லாகூர் மாநாட்டில் முழு விடுதலை அல்லது பூர்ண சுயராஜ்யம் என்பதே இறுதி கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  • 1929 டிசம்பர் 31-ம் நாள் மூவர்ண கொடியை நேரு பறக்கவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாளை முழு சுதந்திர தினமாக கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நாளே இந்தியாவின் குடியரசு நாளாக மலர்ந்தது.

  • உப்புச் சத்தியாகிரகத்தின்கீழ் காந்தியின் தண்டியாத்திரை 1930 மார்ச் 12-ம் நாள் 78 உறுப்பினர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கியது.
  •  
  • தமிழ்நாட்டில் ராஜாஜி நூறு தொண்டர்களுடன் திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குச் சென்று உப்புச்சட்டத்தை மீறினார்.

  •  டி.பிரகாசமும், கே.நாகேஸ்வரராவும் மெரீனா கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் செய் தனர்.

  • லண்டனில் 1930 நவம்பரில் தொடங்கிய முதலாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

  • முதல் வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தலைமை தாங்கினார்.

  • 2-வது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார். இது லண்டனில் 1931 செப்டம்பர் 7-ல் தொடங்கியது. சிறுபான்மையோரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது. அம்பேத்கர், ஜின்னா, ஆகாகான் போன்றோர் காந்தியின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வகுப்புவாதம் குறித்து ஒருமித்த முடிவேதும் காணமுடியாமல் திரும்பினார் காந்தி.

  • சட்டமறுப்பு இயக்கத்தை 1932-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் துவக்கினார். காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரித் தீர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால் பிரிட்டிஷ் பிரதமர் மக்டொ னால்டு தனது வகுப்புத் தீர்வை 1932 ஆகஸ்ட் 17-ம் நாள் அறிவித்தார்.

  • இதன்படி அனைத்து சிறுபான்மை யினருக்கும் (முஸ்லீம், சீக்கியர்கள், ஐரோப்பியர், தாழ்த்தப்பட்டோர்) தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும்.

  • 1932-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி 3-வது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும் பங்கு பெறவில்லை.

  • 1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும்.

  • 1937-ம் ஆண்டு தேர்தலில், மொத்தமுள்ள 11 மாநிலங்களில் காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சியை நிறுவியது. சிந்துவில் மட்டுமே முஸ்லீம் லீக் ஆட்சி அமைத்தது. அசாமில் முஸ்லீம் கூட்டணி அரசு நிறுவப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒருமித்த ஆட்சி ஏற்பட ஒரு பாராளுமன்ற துணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு காங்கிரஸ் மேலிடம் என அழைக்கப்பட்டது. இராஜேந் திர பிரசாத், மௌலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் ஆகியோர் இதன் உறுப்பி னர்கள் ஆவர்.

  • 1937-ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் - லீக் கட்சி களிடையே பிளவைத் தோற்றுவித்தது. காங்கிரசின் அமோக வெற்றி முகமது அலி ஜின்னாவை கடுமையாக பாதித்தது. ஜின்னா காங்கிரஸ் கட்சியை "இந்து வகுப்புவாதக் கட்சி' எனக் கருதி, அதை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.

  • 1940 லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதன் முறையாக ஜின்னா தமது இருநாட்டுக் கொள்கையை தெளிவுபடுத்தினார். முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அளிக்கக் கோரினார்.

  • பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் ரகமத் அலி, முகமது இக்பால் 1930-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லீம்லீக்கின் முதல் மாநாட்டிலேயே இருநாட்டுக் கோட்பாட்டை ஏற்படுத்தினார்.

  • கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழு 1942 மார்ச் 22-ம் நாள் இந்தியா வந்தது.

  • 1942 ஜூலை 14-ம் நாள் வார்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது.

  •  1857-க்குப் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்தான் மக்கள் வலிமை கொண்டு அரசை எதிர்க்கலாயினர்.

  • ராஜாஜியின் திட்டம்- 1944

  • காந்தி - ஜின்னா சந்திப்பு- 1944

  • லியாகத் - தேசாய் உடன்பாடு- 1945 (Liaquat - Desai Pact) காந்தி - ஜின்னா சந்திப்பு தோல்வி அடைந்ததை அடுத்து காந்தியின் நண்பரான புலாபாய் தேசாயும், லியாகத் அலிகானும் 1945 ஜனவரி மாதம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதுவே லியாகத்-தேசாய் உடன்பாடு எனப்படுகிறது.

  • தேசாய்-லியாகத் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகார மாற்றம் பற்றிய ஒரு முடிவுக்கு வர விரும்பிய வைசிராய் வேவல் பிரபு ஓர் அறிவிப்பை 1945-ல் வெளியிட்டார். இதுவே வேவல் திட்டம் எனப்படுகிறது.

  •  வேவல் பிரவு 1945 ஜூன் 25-ம் தேதி சிம்லாவில் கூட்டினார். கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் குழுவை இந்தியர்கள் மட்டுமே கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே வேவல் திட்டத்தின் அடிப்படையாகும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes