banner

Wednesday, March 21, 2018

TET தேர்வு: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்-1

*  குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு 
* குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
*  ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
 *   குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்.
 *   பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் சதவீதம் - 60-80%
 *   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள் *   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு - மனச்சிதைவு
 *   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை
 *   உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் - சாக்ரடீஸ்
*   ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
*   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
*   குழந்தை உளவியல் என்பது - பொது உளவியல் *   மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது - மரபுநிலையும், சூழ்நிலையும். தினமணி கல்வி **************  தினமணி கல்வி
*   ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு *   நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் - வெஸ்ச்லர் *   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும். இது - ஒத்திருக்கும் விதியாகும்.
*   ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் - கிரிகோர் மெண்டல்
 *   ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்
*   கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
 *   அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
 *   ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
*   சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
 *   அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை *   ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்.
*   ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
*   அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
 *   உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
 *   குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல் *   சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய  முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*   வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல் *   மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
*   அடிப்படை மனவெழுச்சி - சினம்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
 *   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
*   குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
 *   வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*   குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
*   சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
*   குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
*   பியாஜே கூறும் அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது.
*   அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது. தினமணி கல்வி **
*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
*    நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
*   கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.
*   கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
*   ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
*   வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.

*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.
*   கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
*   சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
*   ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
*   ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
*    மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
*    'உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
*    உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
*    உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
*    உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
*    எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
*    நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
*    இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
*    வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.
*    தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
*     ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
*    டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
*    தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
*    சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
*    சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
*    முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
*    மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
*    மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
*    முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
*    தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
*    குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
*    சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
*    மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
*    குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
*    'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
*    உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
*    கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
*    ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
*    மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
*    மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
*    சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
*    ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை
*    அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
*    தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
*    நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
*    மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
*    புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.
*    ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்
*    ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா
*     உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
*    தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
*    உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
*    உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
*    பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

*    பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
*    மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
*    வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
*    உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை
*    அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
*    கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
*    சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
*    உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.
*    அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
*    கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.
*     தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
*    'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
*     உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
*    உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
*    பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
*    மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
*    அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
*    குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
*    அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
*    குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
*    குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
*    திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
*    ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
*    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

*    பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
*    புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
*    ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
*    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
*    குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
*    கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
*    ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
*     நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
*    ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes