banner

Thursday, March 15, 2018

தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்

தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்:

* 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்

* உயர்க்கல்வி துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.4,620 கோடி ஒதுக்கீடு

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதி ஒதுக்கீடு

*  இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு

* வரும் நிதியாண்டில் வணிக வரிகளின் கீழ் ரூ.86,858 கோடி வருவாய் ஈட்ட இலக்கு:

*  2019 ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டம்

* புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி நிதி ஒதுக்கீடு

* திருமண உதவி திட்டத்துக்கு ரூ.724 கோடி நிதி ஒதுக்கீடு

* வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்
* ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்

* வறுமை ஒழிப்புக்காக ரூ.519 கோடி நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

* தமிழக பட்ஜெட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படும்

* ரூ.420 கோடி செலவில், 20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்: துணை முதல்வர்

* குறைந்த வருவாய் பிரிவினருக்கு 20,095 வீடுகள் கட்ட தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

* அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்

* நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த ரூ.5,127 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு

* நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ13,896.48 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

* எரிசக்தி துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.13, 964 கோடி நிதி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு

* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம்

* விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியத்துக்கு ரூ.7,537 கோடி ஒதுக்கீடு

* கைத்தறி உதவி திட்டத்தை ரூ.40 கோடியில் அரசு செயல்படுத்தும்

* விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்:

* ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் :

* தாமிரபரணி ஆற்றுடன் நம்பியாற்றை இணைக்க கூடுதலாக ரூ.100.88 கோடி ஒதுக்கீடு

* ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்

* மீனவர்கள் 60 கடல் மைல் தொலைவு வரை தகவல் தொடர்பு பெறும் வசதி உருவாக்கப்படும்

* 2018-19 ஆம் ஆண்டில் ரூ.8000 கோடிக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும்

* அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த விரைவில் அனுமதி

* சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்

* பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி

* மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​

* தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என அறிவிப்பு

* ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ.70 கோடி செலவில் மீன் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை:

* நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073 கோடி நிதி ஒதுக்கப்படும்

*  பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை

* பார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்

* ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள்

* பட்ஜெட்டில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு

* வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம்

* தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு

* சுற்றுலாத்துறைக்கு ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு

* வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம்

* ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு

* தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம்

* ஓசூரில் மலர் வணிக வளாகம்

* காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் ரூ.7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு

* வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு

* மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி

* தமிழக அரசின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி
தமிழக பட்ஜெட் 2018-19 :

வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முன்னதாக முதல்வர் பழனிசாமியும், நிதிநிலை அறிக்கையுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரை அவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.

அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.

துறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, தினந்தோறும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 முதல் 25 நாள்களுக்கு நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதிலுரை முடிக்கப்பட்ட பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றிய பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes