பத்தாம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக மொத்தம் 36 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் அந்த மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
தமிழ் வழி புத்தகங்கள் ரூ.135-க்கும், ஆங்கில வழி புத்தகங்கள் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படும்.
தமிழ் வழியில் கணிதம் மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுகள் புத்தகம் ரூ.85-க்கும், ஆங்கில வழியில் கணிதம் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தீர்வுகள் புத்தகம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படும். மீதமுள்ள 4 பாடங்களுக்குமான ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி புத்தகங்களின் விலை ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில்....: சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு 4 இடங்களில் மாதிரி வினா புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் ஈ.எல்.எம். பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாதிரி வினா புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
ஒரு சில இடங்களில் புதன்கிழமை பிற்பகலிலேயே புத்தக விற்பனை தொடங்கியது.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக வளாகத்தில் இந்த ஆண்டு புத்தகம் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 comments:
தேவையான மாணவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ள தகவல். நன்றி கருன்!
Where can I get the books in Trichy?
thanks for sharing
கேட்டுக்கங்க மாணவர்களே...
வாங்கி பயன்பெறுங்கள்.
மாணவர்களுக்கான பதிவு. அருமை. பகிர்வுக்கு நன்றி கருண்.
Post a Comment