
கடந்த கல்வியாண்டில் 1 ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வியை இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் (1 முதல் 10 வரை ) நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் ஆளும் ஆதிமுக அரசு சமச்சீர் கல்வி வேண்டாம் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜுன் மாதம் பள்ளிகள் துவங்கியும் ஆகஸ்ட் மாதம் வரை மாணவ,மாணவியருக்கு எந்தக் கல்வி முறை என்று தெரியாமல், இறுதியில் சமச்சீர் கல்வி என்றே முடிவானத...